சேதன விவசாயம் (Organic Farming)
சேதன விவசாயம் என்பது விவசாய பண்ணையை உயிருள்ள ஒரு தொகுதியாக கருதி, சூழலுடன் இசைவான முறையில், இயற்கையாக கிடைக்கும் உள்ளீடுகளை பயன்படுத்தி, பொருளாதார ரீதியில் பயனளிக்;கக்கூடிய உற்பத்திகளை மேற்கொள்வதை நோக்கமாக கொண்ட ஒன்றிணைந்த விவசாய முறையாகும்.
இவ்விவசாய முறையின் அடிப்படை தத்துவமானது, பண்ணையில் ஆரோக்கியமானதும் உயிர்வாழ்கின்றதுமான மண்ணை உருவாக்குவதன் மூலம் ஆரோக்கியமான பயிர்களை உற்பத்தி செய்வதாகும்.
1960 ஆம் ஆண்டுகளிலிருந்து சேதன விவசாயமானது விசேட கவனத்தை ஈர்த்ததற்கான காரணம் விவசாயமானது இயந்திரமயமாக்கப்பட்டதும் கிருமிநாசினிச் சேர்வைகள் உணவில் தேக்கமடைந்ததனால் பல சுகாதார பிரச்சனைகளுக்கு காரணமாய் அமைந்ததும், உயிரங்கிகளும் அவற்றின் இருப்பிடங்களும் அழிவடைந்தமையும் சூழல் மாசடைந்தமையுமாகும்.
சேதன விவசாயமுறையில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் தரத்தில் உயர்ந்தவையாகவும் சந்தையில் அதிக விலைவாய்ப்பை பெறக்கூடியவையாகவும் உள்ளன.